பீல்டிங்கின்போது சக வீரர் மீது மோதி காயம் - டூ பிளசிஸ் மருத்துவமனையில் அனுமதி

13.06.2021 11:40:47

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் எனப்படும் பி.எஸ்.எல். போட்டிகள் அபுதாபியில் நடைபெற்று வருகின்றன.

அபுதாபியில் நடந்து வரும் பி.எஸ்.எல் தொடரின் 19-வது லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ், பெஷாவர் ஜால்மி அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியின் 7-வது ஓவரில் டேவிட் மில்லர் அடித்து ஆடினார். இதனால் பந்து பவுண்டரியை நோக்கிச் சென்றது. குவெட்டா அணியில் இடம்பெற்ற தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் டு பிளெசிஸ் அதனை தடுக்க ஓடினார்.

அப்போது சக வீரரான முகமது ஹஸ்னைன் என்பவரது காலில் அவரது தலை மோதியது. இதில் படுகாயமடைந்து சுருண்டு விழுந்த அவருக்கு அணி மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.

இதையடுத்து, டு பிளசிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பரிசோதனைகள் நடந்து வருகின்றன. டு பிளசிசுக்கு பதிலாக போட்டியில் அயூப் விளையாடுகிறார்.