உலக சந்தையில் அதிகரித்த மசகு எண்ணெய் விலை!

18.01.2022 06:03:13

அபுதாபியில் ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் எண்ணெய் விநியோகம் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று  உயர்வடைந்துள்ளது.

அபுதாபி தாக்குதலை தொடர்ந்து ஈரான் மற்றும் சவூதி அரேபியா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் மசகு எண்ணெய் விநியோகம் குறைவடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இன்று  ஆசிய சந்தையில் பிராண்ட்  ரக எண்ணெய் பீப்பாய்  ஒன்றின் விலை 86.92 டொலர்களாக அதிகரித்துள்ளதுடன், டபிள்யு.டி.ஐ எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.62 டொலர்களாக அதிகரித்துள்ளது.