ஸ்வீடனை வீழ்த்தி காலிறுதிக்கு சென்றது உக்ரைன் அணி
2020 ஆம் ஆண்டு யூரோ கிண்ண கால்பந்து தொடரில் நேற்று இடம்பெற்ற மற்றுமொரு 16 ஆவது சுற்றுப்போட்டியில் உக்ரைன் அணி வெற்றிபெற்றுள்ளது.
ஸ்கொட்லாந்தின் ஹம்ப்டன் பார்க் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் உக்ரைன் அணி 2-1 என்ற கணக்கில் கோல்களை புகுத்தி வெற்றிபெற்றது.
குறித்த போட்டி ஆரம்பமாகி 27 ஆவது நிமிடத்தில் உக்ரைன் அணி வீரர் ஒலெக்சாண்டர் ஜிஞ்சென்கா முதலாவது கோலை அடித்தார்.
இதனை தொடர்ந்து பதிலுக்கு சுவீடன் அணி வீரர் எமில் போர்ஸ்பெர்க் அணிக்காக ஒரு கோலை அடிக்க இரு அணிகளும் ஆட்ட நேரமுடிவில் 1-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
பின்னர் மேலதிக நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் 99 ஆவது நிமிடத்தில் சுவீடன் அணி வீரர் மார்கஸ் டேனியல்சன் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
பின்னர் 120 ஆவது நிமிடத்தில் அர்டெம் டோவ்பிக் மற்றுமொரு கோலை புகுத்த உக்ரைன் அணி 2-1 என்ற கணக்கில் கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில் எதிர்வரும் 4 ஆம் திகதி இங்கிலாந்து அணியுடன் உக்ரைன் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.