ஐக்கிய மக்கள் சக்தியின் பதவிகளைத் துறந்தார் ராம்!
|
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளதாக மேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கலாநிதி சி.வை.பி. ராம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். |
|
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், கட்சியில் நான் வகித்து வரும் அனைத்துப் பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்கிறேன் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். அதனடிப்படையில், கட்சியில் நான் வகித்துவரும் கொழும்பு வடக்கு பிரதான அமைப்பாளர், ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் மற்றும் கட்சியின் உதவிச் செயலாளர் ஆகிய பதவிகளை இராஜினாமா செய்கிறேன். அத்துடன் எனக்கு ஒப்படைக்கப்பட்ட கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றியதன் மூலம் கட்சிக்கு அனைத்து அம்சங்களிலும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன், இதனை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள். உங்கள் புரிதலுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றுள்ளது. |