பிரம்மாண்ட பொதுக்கூட்டம்!. தமிழகம் வரும் மோடி!.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளின் பணிகள் சூடுபிடிக்க துவங்கியிருக்கின்றன. குறிப்பாக கூட்டணி அமைப்பது, தொகுதிகளை ஒதுக்குவது, பொதுக்கூட்டம் போடுவது போன்ற வேலைகள் தீவிரமடைந்திருக்கிறது. பாஜகவை பொறுத்தவரை தமிழகத்தில் 206 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது.
இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகளும் இணைந்திருக்கிறது. அன்புமணி பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம், புதிய நீதி கட்சி போன்ற கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருக்கிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடத்தப்படும் மாபெரும் பொதுக்கூட்டம் சென்னைக்கு அடுத்துள்ள மதுராந்தகத்தில் இன்று மாலை 3 மணிக்கு மேல் நடைபெறவிருக்கிறது.. இந்த பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
லிருந்து மதியம் 1:15 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகத்திற்கு செல்கிறார். அங்கு கூட்டணி தலைவர்களை அவர் சந்திக்கிறார். மேலும் பொதுக்கூட்டத்திலும் அவ்வர் உரையாற்றுகிறார். அதன்பின் பொதுக்கூட்டம் முடிந்து 4.15 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் அவர் சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லிக்கு செல்கிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது