துப்பாக்கிகளுடன் மூன்று பேர்கைது

25.11.2021 11:05:03

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கேகாலை, நூரிய காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பல்லேபோக பிரதேசத்தில் காவற்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கித்துல்கல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இரத்தினபுரி, வெலிகோபொல காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பரகஹமடித்த பிரதேசத்தில், வெலிகோபொல காவற்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது உள்நாட்டு துப்பாக்கிகள் இரண்டுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அக்குரெல்ல பிரதேசத்தை சேர்ந்த 25, 28 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்