F-35B போர் விமானம் ஜூலை 22 பிரித்தானியா புறப்பட வாய்ப்பு!

19.07.2025 09:22:03

கேரளாவின் திருவனந்தபுரத்தில் கடந்த ஜூன் 14 முதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறங்கியிருந்த பிரித்தானிய கடற்படையின் F-35B போர் விமானம், ஜூலை 22-இல் திரும்ப புறப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் மிகப் பிரபலமான மற்றும் நவீனமான யுத்தவிமானங்களில் ஒன்றாகக் கருதப்படும் F-35B, HMS Prince of Wales ஏவுகாப்புக் கப்பலிலிருந்து புறப்பட்டு வந்தபோது, வானிலை மோசமானதால் எரிபொருள் குறைவாகி அவசரமாக கேரளாவில் தரையிறங்கியது.

இதனைத் தொடர்ந்து, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இது ஒரு மாதத்துக்கும் மேலாக தரையிலேயே இருந்தது.

ஜூலை 6-ஆம் திகதி பிரித்தானியாவிலிருந்து வந்த நிபுணர்கள் குழு, விமானத்தை பழுது பார்த்து தற்போது பறப்பதற்கான இறுதி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். காரணமாக, இது ஒரு மாதத்துக்கும் மேலாக தரையிலேயே இருந்தது.

இந்த அவசர நிலை சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டதுடன், Kerala Tourism மற்றும் பல தனியார் நிறுவனம் இதனை விளம்பரத்திற்காகவும் பயன்படுத்தின. காரணமாக, இது ஒரு மாதத்துக்கும் மேலாக தரையிலேயே இருந்தது.

இதற்கிடையில், விமானத்தை பல பாகங்களாக பிரித்து கார்கோ விமானத்தில் மீட்டுச் செல்லும் திட்டமும் பரிசீலிக்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.