சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி

24.07.2021 10:49:47

பாலியல் புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

உடல்நலக்குறைவு காரணமாக ஏற்கனவே சிவசங்கர் பாபா ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார்.

இந்நிலையில்  மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.