வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீட்டு மதிலில் மோதி விபத்து: சாரதி காயம்
07.10.2021 06:22:09
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்று (06) மாலை டாட்டா ரக வாகனம் வீட்டின் மதிலில் மோதியதில் ஒருவர் காயமடைந்ததாக ஈரப்பெரியகுளம் காவற்துறையினர் தெரிவித்தனர்.
அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சிறிய டாட்டா ரக வாகனம் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் விபத்து இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் வாகன சாரதி காயமடைந்துள்ளதுடன், வாகனம் பலத்த சேதமடைந்ததுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் வீட்டின் மதில் உடைக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.