தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து 14 பேர் உயிரிழப்பு!
வெனிசுலாவில் பெய்துவரும் கனமழை காரணமாக, தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனமழை காரணமாக, சுரங்கத்தில் ஒரு பாதி இடிந்து விழுந்ததையடுத்து பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்த 14 பேரின் உடலை இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளனர்.
கராகஸிலிருந்து தென்கிழக்கே சுமார் 850 கிலோமீட்டர் (528 மைல்) தொலைவில் உள்ள எல் கல்லோ நகரில் உள்ள குவாட்ரோ எஸ்குவினாஸ் டி காரடல் சுரங்கத்தின் மூன்று வெவ்வேறு சுரங்கங்களில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்கச் சுரங்கத்திற்குள் சிக்கிய மக்களுக்காக “நீர் மட்டத்தைக் குறைக்க அப்பகுதியில் உள்ள அனைத்து சுரங்கங்களிலிருந்தும் நீர் வெளியேற்றப்பட்டு, பின்னர் மீட்பு முயற்சிகளை மதிப்பீடு செய்ததன் மூலம்” தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகப் தெரிவிக்கப்படுகின்றது.