நாமல் உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை.

27.10.2026 09:00:00

எயார்பஸ் கொள்வனவில் கையூட்டல் தொடர்பாக, மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் நிரந்தர மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று(27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

 

இதற்கமைய, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, பிரதிவாதிகளுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

 

ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான கையூட்டல் சம்பவம் குறித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இன்று (27) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

 

13ஆம் திகதி சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்வைக்கப்பட்ட காரணங்களை கருத்தில் கொண்டு நீதிமன்றம், சந்தேக நபரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் வழக்கறிஞர்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விவரங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.