சுப்ரமணியபுரம்' ரீ-ரிலீஸ்: கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
சசிகுமார் இயக்கத்தில் வெளியான 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் 15 ஆண்டுகளை பிறகு இன்று மீண்டும் வெளியானது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள். சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.: 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 4-ம் தேதி) தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் சுப்ரமணியபுரம்' படம் தமிழகம், கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் செய்யப்பட்டது. வடபழனி கமலா தியேட்டரில் இன்று காலை திரையிடப்பட்ட 'சுப்ரமணியபுரம்' படத்தை பார்ப்பதற்கு சசிகுமார், சமுத்திரக்கனி, நடிகர் ஜெய் ஆகியோர் வந்தனர். அதன்பின்னர் படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.