விசேட சுற்றிவளைப்பில் 660பேர் கைது!
04.02.2024 07:10:04
விசேட சுற்றிவளைப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 660 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 552 சந்தேக நபர்களும் குற்றத் தடுப்பு பிரிவிற்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 108 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது 152 கிராம் ஹெரோயின், 134 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.