அதிக விலைக்கு அரிசி விற்பனை.

17.09.2025 08:10:13

அரசாங்கத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் சோதனைகளை நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) தீவிரப்படுத்தியுள்ளது.

CAA தகவலின்படி, கிரி சம்பா மற்றும் சம்பா அரிசி வகைகளின் அதிகபட்ச சில்லறை விலை கிலோவுக்கு ரூ. 260 ஆகும்.

 

ஆனால் பல வர்த்தகர்கள் அவற்றை அதிக விலைக்கு விற்பனை செயற்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, அரிசி விற்பனை தொடர்பாக அதிகாரசபை கிட்டத்தட்ட 3,000 சோதனைகளை நடத்தியுள்ளது.

அவற்றில் சுமார் 1,000 குறிப்பாக அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்ததற்காக நடந்தவை.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அதிக விலைக்கு அரிசி விற்கும் கிட்டத்தட்ட 20 வர்த்தக நிலையங்கள் சோதனை செய்யப்பட்டதாக CAA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற சோதனைகளைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக நீதிமன்றங்கள் இதுவரை சுமார் ரூ. 95 மில்லியன் அபராதம் விதித்துள்ளன.