சஜித் தரப்புடன் இணைந்து செயல்பட தயாராகவுள்ள ரொஹான் பல்லேவத்த
24.12.2020 11:35:27
கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சமூக ஜனநாயகக்கட்சியின் வேட்பாளர் ரொஹான் பல்லேவத்த ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்த அவர் தமது தீர்மானத்தை அறிவித்தார்.
இதனையடுத்து ரொஹான் பல்லேவத்த, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவுக்கு நியமிக்கப்படவுள்ளார். அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் வெளியுறவுக்கொள்கை மற்றும் வெளியுறவு வர்த்தக அபிவிருத்தி சபையின் தவைராகவும் நியமிக்கப்படவுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட ஆலோசகராகவும் அவர் செயற்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.