நேற்றைய போட்டிகளின் முடிவுகள் - யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ணம்
2020ஆம் ஆண்டு யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ண கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் உள்ளூர் நேரப்படி இன்று (புதன்கிழமை) குழுநிலைப் போட்டிகளின் மூன்றாம் கட்ட போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.
ஃபெரெங்க் புஸ்கஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், போர்த்துக்கல் அணியும் பிரான்ஸ் அணியும் மோதின.
குழு ‘எஃப்’ பிரிவில் நடைபெற்ற இப்போட்டி, 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.
இதில் போர்த்துக்கல் அணி சார்பில், கிறிஸ்டீயானோ ரொனால்டோ 30ஆவது மற்றும் 60ஆவது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி இரண்டு கோல்கள் அடித்தார்.
பிரான்ஸ் அணி சார்பில், கரீம் பென்ஸிமா 47ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலும் 47ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் என இரண்டு கோல்கள் அடித்தார்.
அலையன்ஸ் அரினா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், ஜேர்மனி அணியும் ஹங்கேரி அணியும் மோதிக்கொண்டன.
குழு ‘எஃப்’ பிரிவில் நடைபெற்ற இப்போட்டி, 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.
இதில் ஜேர்மனி அணி சார்பில், கெய் ஹேவர்ட்ஸ் 66ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் லியோன் கொரேட்ஸ்கா 84ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
ஹங்கேரி அணி சார்பில், ஆடம் ஸாலை 11ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் ஆண்ட்ராஸ் ஷாஃபர் 68ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.