இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி!
ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற உள்ள இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரைப் பார்வையிடுவதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறும் விளையாட்டரங்கின் மொத்த இருக்கை எண்ணிக்கையில் 70 சதவீதமானோருக்கு மாத்திரம் அனுமதி வழங்க சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
இதற்கிடையில், இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 45 போட்டிகளுக்குமான பற்றுச்சீட்டுகள் விற்பனை செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 17ஆம் திகதி ஓமானில் ஆரம்பமாகும் முதலாம் சுற்றுப் போட்டிகளுடன் துவங்கும் உலகக்கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் நவம்பர் 14ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிறைவடையவுள்ளது.
தகுதிகாண் முதலாம் சுற்றில் போட்டியிடவுள்ள இலங்கை அணி, எதிர்வரும் 18 ஆம் திகதி தமது முதல் போட்டியில் நமீபியாவை எதிர்கொள்ள உள்ளது.