யாழில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஐவர் பலி

10.08.2021 08:07:50

யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு வரையான 24 மணிநேரத்தில் மேலும் 5 பேர் கொவிட் நோயினால் உயிரிழந்தனர் என்று யாழ்.போதனா வைத்திய சாலைத் தகவல்கள் தெரிவித்தன.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் நாவற்குழியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் உரும்பிராயைச் சேர்ந்த பெண் ஒருவருமாக மூவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்தனர்.

அத்துடன், அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.