'96' படத்தின் 2-ம் பாகம்.

25.09.2025 07:00:00

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படம் '96'. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் பிரேம் குமார். 96 படத்தில் இடம்பெற்ற ரீயூனியன் காட்சி, பள்ளி பருவ காட்சி, த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையிலான பேச்சுவார்த்தை என பல்வேறு விஷயங்கள் ரசிக்க வைத்தது.

பழைய நினைவுகளை நமக்கு மீண்டும் திரையில் காட்டிய '96 திரைப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். இதனால் இப்படத்தின் 2-ம் பாகம் எடுக்க இயக்குநர் முடிவு செய்தார்.

இந்நிலையில், தற்போது 96 படம் குறித்து இயக்குநர் பிரேம் குமார் சில அதிரடி தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில், " 96 படத்தின் 2ம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டேன். நான் எழுதியதில் மிகவும் சிறந்த கதை இது. 96 படத்தின் முதல் பாகத்தை விட இது அற்புதமாக இருக்கும்.

அதே நடிகர்களை வைத்து 2ம் பாகத்தையும் எடுக்க விரும்புகிறேன். இல்லையெனில் இந்த படத்தை எடுக்க மாட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.