பிரதமர் பதவி சரத் பொன்சேகாவுக்கா !!

12.05.2022 06:31:33

பிரதமர் பதவியை வழங்குவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தொடர்புகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், தாம் பிரதமராக நியமிக்கப்பட்டால், நாட்டை ஆளக்கூடிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெறுவதற்கு தனக்குப் பின்னால் பலம் இருப்பதாக பொன்சேகா நிரூபிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனத்தில் அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அடுத்த பிரதமர் யார் என்பது குறித்தும், உத்தேச இடைக்கால அரசாங்கத்தில் பொறுப்புகளை ஏற்பது குறித்தும் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் இது தொடர வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது

அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதியாக இடைக்கால அரசாங்கத்தில் இணைவது குறித்து பரிசீலிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இதேநேரம், சரத் பொன்சேகா போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டிருப்பதால் கட்சியில் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளது.