நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகபோகும் அஜித் நிவாட் கப்ரால்

11.09.2021 06:30:48

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளருக்கு எதிர்வரும் திங்கட்கிழமை அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய வங்கியின் ஆளுநராக இவர் மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.