அரச வீழ்த்தும் கனவு பலிக்காது- 2029இலும் அனுரவே ஜனாதிபதி!
|
உலகளாவிய சவால்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் மத்தியில் அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை வலுவான முறையில் முகாமைத்துவம் செய்து வருகிறது. டொலர் விலையில் ஏற்படும் மாற்றத்தை காரணம் காட்டி அரசாங்கத்தை வீழ்த்தலாம் என்று யாராவது கனவு கண்டால் அது ஒருபோதும் பலிக்காது. 2029 ஆம் ஆண்டும் அநுரகுமார திஸாநாயக்கவே ஜனாதிபதியாவார் என்று வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். |
|
கொழும்பில், ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், காப்புறுதி மற்றும் கப்பல் கட்டண உயர்வு போன்றவற்றால் உலக சந்தையில் எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் விலைகள் உயரந்துள்ளன. அதன் தாக்கத்தால் உள்நாட்டிலும் டொலருக்கான தேவை அதிகரித்துள்ளது. எனினும், உலக வங்கி, மற்றும் சர்வதேச நிதியங்கள் ஊடாக தொடர்ந்து நிதி கிடைக்கப்பெறுவதால் அரசாங்கத்திடம் டொலருக்கான கையிருப்பு போதியளவு காணப்படுகிறது. எதிர்காலத்தில் டொலர் விலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் சிலர் டொலர்களை கொள்வனவு செய்ய முற்படுவதால் தற்காலிகமாக டொலரின் மதிப்பு 350 ரூபாயைக் கடந்தது. அதனை தடுக்கும் நோக்கில், தனியார் வாகன இறக்குமதிக்கான வரியை 50 சதவீதத்தால் அரசாங்கம் அடுத்த 3 மாதங்களுக்கு உயர்த்தியுள்ளது. இதன் பலனாக டொலரின் மதிப்பு மீண்டும் 340 ரூபாய்க்கு குறைவடைந்துள்ளது. அத்துடன் சுற்றுலாத்துறை மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் அந்நியச் லெவாணி மேலும், வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளும், சில போலி விவசாய அமைப்புகளும் உரம் மற்றும் மானியம் குறித்து பரப்பும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை ஆகும். விவசாய உற்பத்திகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் முதல் முறையான திட்டமிடலுடன் உரங்களை இறக்குமதி செய்துள்ளது. அதேவேளை, உரம் வாங்குவதற்கான மானியத் தொகை 3,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த பெரும் போகத்துக்கான தேவையான உரங்களை இறக்குமதி செய்யும் பணிகள் தற்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விநியோகிப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் உரம் வழங்கவில்லை எனக் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை ஆகும். கடந்த காலங்களில் 380 முதல் 400 ரூபாய் வரை விற்க்கப்பட்ட கீரி சம்பா அரிசியின் விலைளை கட்டுப்படுத்துவதற்காகவே பொன்னி மற்றும் ஜி.ஆர்.11 ஆகிய அரசி வகைகள் இறக்கமதி செய்யப்பட்டன. இதன் காரணமாக தற்போது சந்தையில் கீரி சம்பாவின் விலை 340 ரூபாய்க்கு கீழ் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அரசாங்கம் அரிசி இறக்குமதியை முழுமையாகத் தளர்த்தி எந்தவொரு வர்த்தகரும் இறக்குமதி செய்யக் கூடிய சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இதில் எவ்வித ஊழலோ அல்லது தரகுப்பணம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. சந்தையில் பொன்னி அரிசியின் அதிகபட்ச விலை 255 ரூபாயும் ஜி.ஆர்.11 அரிசியின் விலை 241 ரூபாயுமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனைவிட அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை கடுமையான நடவடிக்கை எடுக்கும். மேலும் உள்நாட்டில் 4 மாதங்களுக்கு தேவையான மேலதிக சிவப்பு மற்றும் வெள்ளை அரிசி கையிருப்பில் உள்ளதால் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது. தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள் மற்றும் வர்த்தகர்கள் வழங்கிய நிதிகள் அனைத்து மத்திய வங்கியின் திறைசேரியில் பாதுகாப்பாக உள்ளன. கடந்த கால ராஜபக்ஷ அரசாங்கள் சுனாமி நிதியை கொள்ளையடித்தது போல் இந்த அரசாங்கம் மக்களின் நிதியை தொடாது. அரசாங்கத்தின் முறையாக நிதி முகாமைத்துவத்தால் அரசாங்க வருமானம் 40 சதவீதம் அதிகரித்துள்ளதுடன் செலவுகள் 14 சதவீதத்தால் குறைக்கப்பட்டு திறைசேரியில் 1.4 ட்ரில்லியன் ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. 2025 முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தித்வா சூறாவளியால் பாதிப்படைந்த மக்களுக்கு மொத்தம் 77,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்க்கட்சிகள் குறிப்பிடும் 2.5 மில்லியன் டொலர் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. மாகாண சபை தேர்தலைகளை அரசாங்கம் பிற்போடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. எனினும் கடந்த மே தினத்தில் அனைத்தும் ஒன்றிணைந்தாலும் திரட்ட முடியாத பேரணியை தேசிய மக்கள் சக்தி கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் நடத்திய பிரம்மாண்டமான பேரணிகள் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் மக்களின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை நிரூபித்துள்ளன என்றார். |