நேற்று வவுனியாவில் அறுவர் கொரோனாவிற்கு பலி

11.09.2021 06:25:35

வவுனியாவில் நேற்று (10)அறுவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்தனர்.

குறித்த நபர்களில் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆயினும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்

இதேவேளை சுகவீனம் காரணமாக அவர்களது வீடுகளில் நேற்றுமுன்தினம் மரணமடைந்திருந்த 5 பேருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அதன் முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. அதனடிப்படையில் அவர்களிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது