மீனவரின் வலையில் சிக்கிய அரியவகை மஞ்சள் நிற ஆமை

04.08.2021 06:19:05

மீனவரின் வலையில் சிக்கிய அரியவகை மஞ்சள் நிற ஆமை  வியந்துபோன கிராம மக்கள் 


மேற்கு வங்க மாநிலம் கிராமத்தில் இருந்த குளம் ஒன்றில் அரியவகை மஞ்சள் ஆமை கண்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.மின்னாப்பூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் கெஜூரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த சுபிமல் பெரா என்பவர் அருகில் இருந்த குளத்தில் மீன்பிடித்துக் கொண்டு இருந்துள்ளார்.


இதனிடையில், அவரின் வலையில் அரிய வகை ஆமையினமான ’மஞ்சள் ஆமை’ சிக்கியுள்ளது. மஞ்சள் கலரில் ஆமை இருந்ததைப் பார்த்து வியப்படைந்த அவர், தல்பதி காட் கடலோர காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.


இதனால், விரைந்து வந்த கடலோர காவல்படையினர் அரிய வகை ஆமையைப் பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.இதனைத்தொடர்ந்து, அங்கு வந்த அதிகாரிகள் அரிய வகை ஆமையை பத்திரமாக எடுத்துச் சென்றனர். ஆமையைப் பார்க்க உள்ளூரைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அங்கு கூடினர்.