விசாரணை ஒத்திவைப்பு.
01.09.2026 08:52:59
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை முழு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் மீதான தீர்மானத்தை அறிவிப்பதற்காக, மனுக்கள் மீதான விசாரணையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.