பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்

21.01.2025 08:27:40

பாராளுமன்ற அமர்வு இன்று முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கடந்த 10 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று  காலை 9.30 முதல் காலை 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, காலை10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது

முற்பகல் 11.00 மணி முதல் முற்பகல் 11.30 வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், முற்பகல் 11.30 முதல் மாலை 5.30 வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் 'க்ளீன் ஸ்ரீ லங்கா' திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெற்று, நாளை இரண்டாவது நாள் விவாதத்துக்காக ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது