ஐ.நா பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்.
|
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும் நீண்டகால முயற்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆதரவு தெரிவித்துள்ளார். |
|
இது "உலகளாவிய அதிகார யதார்த்தங்களை" அங்கீகரிப்பதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த முயற்சிக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்றும் கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா இணைவது "சர்வதேச அரசியலின் நடைமுறை யதார்த்தங்களை அங்கீகரிப்பதாக" இருக்கும் என்று தெரிவித்தார். "பல ஆண்டுகளுக்கு முன்பே, ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசியவன் நான் தான். எனவே, இது எனக்குப் பழைமையான ஒரு தலைப்பு," என்று அவர் கூறினார். "நான் தொடர்ந்து அந்த முயற்சிக்கு ஆதரவளிப்பேன். அது உலகளாவிய அதிகார யதார்த்தங்களின் ஒரு நடைமுறைக் காட்சியாகும் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவை உங்களால் புறக்கணிக்க முடியாது. இந்தியாவை உங்களால் ஒதுக்கி வைக்க முடியாது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவின் பிரதிநிதித்துவம் என்பது சர்வதேச அரசியலின் நடைமுறை யதார்த்தங்களை அங்கீகரிப்பதாக இருக்கும்." என்றார். |