குத்துச்சண்டையில் களமிறங்கிய ரொனால்டோ

22.01.2023 14:47:18

குத்துச்சண்டை (UFC) வீரர் பிரான்சிஸ் நாஹன்னோவை சந்தித்த ரொனால்டோ, அவருடன் சண்டையிடுவதுபோல் சென்று கட்டிப்பிடித்த காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சவுதி அரேபியாவின் அல் நஸர் அணியில் ஒப்பந்தமாகியுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்று நடக்கும் எட்டிபாக் அணிக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக களமிறங்க உள்ளார்.

முன்னதாக, ரொனால்டோ UFC மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியான பிரான்ஸிஸ் நாஹன்னோவை சந்தித்தார். இருவரும் மோதிக் கொள்வது போல் சென்று சண்டைக்கு தயாராகினர

உடனே ரொனால்டோ சிரித்தபடி அவரை கட்டியணைத்தார். இதுதொடர்பான காணொளி தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ரொனால்டோவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள பிரான்ஸிஸ், அத்துடன் ரியாத்தில் அவருடன் சிறந்த உரையாடல் நிகழ்ந்ததாகவும், அவர் தனக்கு உத்வேகம் அளிக்கும் ஒருவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு வலது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரான்ஸிஸ், அந்த காயத்தில் இருந்து மீண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.