தமிழ் ‘இனப்படுகொலை’ தொடர்பான சிங்களவர்களின் விண்ணப்பத்தை நிராகரித்தது கனேடிய நீதிமன்று

01.07.2022 11:15:54

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் தமிழ் இனப்படுகொலைக் கல்வி வார அறிவிப்பை 'கல்வி' நோக்கத்திற்காகச் செய்ததாகக் கூறி தடை கோரிய கனடாவில் வசிக்கும் சிங்களவரின் மனுவை கனேடிய நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தமிழர்கள் குறிப்பிடுவது சட்டவிரோதமானது 

 

உலக வரலாற்றில் தமிழ் இனப்படுகொலையும் ஏனைய இனப்படுகொலைகளும் இடம்பெற்ற காலப்பகுதியாக ஒவ்வொரு வருடமும் மே 18ஆம் திகதியுடன் முடிவடையும் ஏழுநாட்களை புலம்பெயர்ந்த கனேடிய தமிழர்கள் குறிப்பிடுவது சட்டவிரோதமானது என தெரிவித்தும் சர்வதேச சட்டத்தின் கீழ் எந்தவொரு தமிழ் இனப்படுகொலையும் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், 'இனப்படுகொலை' என்ற வார்த்தையை பயன்படுத்த கனேடிய மாகாண அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் சிங்கள விண்ணப்பதாரர்கள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

நிராகரித்தது நீதிமன்று

 

இது ஒரு பிரிவினருக்கு எதிராக மற்றொரு பிரிவினர் மீதான வெறுப்பை வளர்க்கிறது என்றும் இந்த வழக்கில் வாதிடப்பட்டது. எனினும் சிங்கள விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை இரத்து செய்த ஒன்ராறியோ நீதிமன்றம், இலங்கை 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது, ஆனால் 'போருக்கான காரணம் முடிவிற்கு வரவில்லை' என்று அறிவித்துள்ளது.