இலங்கை வருகிறது மேற்கிந்திய தீவுகள் அணி!

30.10.2021 03:51:30

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர் ஒன்று நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ளது.

இந்தத் தொடரில் பங்கேற்கும் மேற்கிந்திய தீவுகள் தேசிய கிரிக்கெட் அணி, எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

மேற்படி போட்டிகள், உயிர்குமிழி நடைமுறைகளைப் பின்பற்றி, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.