
காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்!
02.03.2025 10:28:18
ரமலான் பண்டிகை காலத்தை முன்னிட்டு, காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தினை மேற்கொள்வது தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின்(Steve Witkoff) முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.
மேலும் மத விடுமுறை நாட்களில் பதட்டங்களைத் தணிப்பதே தற்காலிக போர்நிறுத்தத்தின் நோக்கம் எனவும்,இக்காலத்தில் உலகெங்கிலும் உள்ள பலர் பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்துடன் ரமலான் மாதத்தை வரவேற்கிறார்கள் எனவும், இதன்காரணமாகவே தற்காலிகப் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்நிறுத்தத்தின் முதல் கட்டம் காலாவதியாகும் தருவாயில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.