கல்வி சீர்திருத்தம் ஒத்திவைப்பு.
13.01.2026 12:32:06
சர்ச்சைக்குரிய ஆங்கில மொழி தொகுதியை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருப்பதால், 6 ஆம் வகுப்புக்கான கல்வி சீர்திருத்தங்களை 2027 வரை ஒத்திவைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (13) அன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவிலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எனினும், முதலாம் வகுப்புக்கான கல்வி சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.