தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு “சூடு கண்ட பூனை”

14.05.2022 15:54:52

நல்லாட்சியில் ரணிலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதுகாத்தனர். சூடு கண்ட பூணை அடுப்பங்கரையை நாடாது அதுபோல் எமது தமிழ் தலைவர்கள் பல தடவைகள் சூடுகண்டும் மீண்டும் மீண்டும் அடுப்பங்கரைக்கு சென்றுள்ளனர். 

இருந்தபோதும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்ப்பதற்கான தீர்வுத் திட்டங்கள் இல்லாத எந்தவொரு அமைச்சரவையிலும் தமிழ் தேசிய பரப்பில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க கூடாது பங்கேற்ற மாட்டார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளாரும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.  

சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவும், தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும், ராஜபக்ச சகோதரர்களையும் காப்பாற்றக் கூடியவராக ரணிலைச் சிந்தித்து நியமித்திருக்கிறார். ஏதிர்க்கட்சியை உடைக்க எண்ணியிருக்கிறார், ஆனால், வருகின்ற பாராளுமன்ற அமர்வில் ஓன்றுக்கு மேற்பட்ட பிரதமர் வேட்பாளர்கள் களமிறங்கவிருக்கும் நிலையில் தமிழ் பரப்பிலிருந்து  பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், நான் உட்பட மிகவும் நிதானமாகச் சிந்தித்து  முடிவை எடுக்கவேண்டும்

எதிர்வரும் வாரத்தில் இந்த பிரதமர் தனக்குரிய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிவரும்.

பாராளுமன்ற அமர்வு கூடுவதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூடி தீர்க்கமான முடிவை எடுப்போம்.

இந்த ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி என்று கூறப்பட்ட 2015 இருந்து 2019 வரையன ஆட்சியில் பிரதமராக இருந்தார் 2018 ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சட்டத்தரணிகள் இதே ரணிலை பாதுகாத்தனர் எனவே இன்னும் அவ்வாறான நிலமைக்கு செல்வார்கள் என நினைக்கவில்லை. 

சூடு கண்ட பூணை அடுப்பங்கரையை நாடாது அதுபோல் எமது தமிழ் தலைவர்கள் பல தடவைகள் சூடுகண்டும் மீண்டும் மீண்டும் அடுப்பற்கரைக்கு சென்றுள்ளனர். 

எனவே இனிமேலும் அவர்கள் செல்வார்கள் ஆனால் இன்று “கோட்டா கோ ஹோம்” என்று காலிமுகத்திடலில் இருக்கும் மக்கள் எமக்கு எதிராக கோ கோம் என்று கூச்சலிட நாங்கள் சந்தர்ப்பம் கொடுக்க கூடாது என்றார்.