திருவள்ளுவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

16.01.2023 22:07:17

நெல்லையில் திருவள்ளுவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். திருநெல்வேலி நெல்லையில் திருவள்ளுவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தி.மு.க. உலக பொதுமறையான திருக்குறளை தந்த திருவள்ளுவரின் 2054-ம் ஆண்டு பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை டவுன் வாகையடி முக்கு அருகில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. சார்பில் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேயர் பி.எம்.சரவணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாநகர தி.மு.க. சார்பில் மாநகர செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

டவுன் பகுதி தலைவர் அய்யப்பன், செயலாளர் சங்கர், தச்சநல்லூர் மண்டல தலைவர் முத்துவேல்ராஜா, விவசாய அணி தலைவர் முருகன், பாளையங்கோட்டை ஒன்றிய இணை செயலாளர் பரமசிவ பாண்டியன், மேலப்பாளையம் பகுதி செயலாளர் முத்து, துணை செயலாளர் முருகேஷ், பகுதி இளைஞரணி செயலாளர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் மகளிர் பாசறை செயலாளர் நித்யா தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வீரத்தமிழ் முன்னணி சுடர்ஒளி உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் பேரவை சார்பில் செயலாளர் கணேசன் தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் சொனா. வெங்கடாசலம், முத்துகுமாரசாமி, வசந்த், ஆசிரியர் ஜனார்த்தனம் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருக்குறள் முற்றோதுதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தேசிய நூலாக அறிவிக்க... நெல்லை மாவட்ட தமிழ்நல கழகம் சார்பில் மாவட்ட தலைவர் முரசொலி முருகன், செயலாளர் பாப்பாக்குடி செல்வமணி ஆகியோர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். துணைத்தலைவர் திருமாவளவன், கவிஞர்கள் ஜெயபாலன், சக்திவேலாயுதம், பிரபு, தச்சைமணி, கோதை மாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருக்குறளை, மத்திய அரசு தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 20 பேருக்கு திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் படங்கள் வழங்கப்பட்டது. இதேபோல் பல்வேறு அமைப்பினரும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.