இந்தியா- இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி இன்று: கோஹ்லி விலகல் ?
12.07.2022 10:34:04
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
லண்டன்- கெனிங்டன், ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும் இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லரும் தலைமை தாங்கவுள்ளனர்.
இப்போட்டியில் இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோஹ்லி விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற பயிற்சியின் போது பங்கேற்காத கோஹ்லிக்கு, இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அவர் இப்போட்டியிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியமை குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.