முற்றாக முடக்கப்பட்டது சந்தை சுற்றுவட்ட வீதி !
23.07.2021 09:52:25
வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக இராணுவத்தினரால் முடக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் அமைந்துள்ள சலூன் நிலையத்தில் பணிபுரியும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து இன்று காலை குறித்த வீதியுடனான போக்குவரத்து இராணுவத்தால் தடைசெய்யப்பட்டு, முற்றாக முடக்கப்பட்டது.
இதேவேளை முடக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களிற்கு சுகாதார பரிசோதகர்களால் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.