அடுத்த டார்கெட் விஜய்

07.11.2021 10:48:45

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை வாரிக்குவித்து வருகிறது.

தமிழ், தெலுங்கில் பிரபல ஒளிப்பதவாளராக வலம்வந்த சிவா, கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை வாரிக்குவித்து வருகிறது. 

 

அடுத்ததாக சூர்யாவுடன் கூட்டணி அமைக்க உள்ள இயக்குனர் சிவா, அதன்பின் விஜய் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் நடித்த பத்ரி படத்தில் தான் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியதாகவும், அப்போதிலிருந்தே, தனக்கும், விஜய்க்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருவதாகவும் இயக்குனர் சிவா கூறியுள்ளார்.