
யாழ்தேவி இன்று காலை பயணத்தினை ஆரம்பித்துள்ளது.
கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம்”எனும் தொனிப்பொருளில் யாழ்தேவி ரயில் இன்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட மக்களிடையே கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் க்ளீன் ஸ்ரீலங்கா செயலக அலுவலகத்தினால் “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம்”எனும் தொனிப்பொருளில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்த திட்டமானது இன்று முதல் ஒருவார காலத்திற்கு செயற்படுத்தப்படவுள்ளதுடன் இதன் ஆரம்ப நிகழ்வு கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் பொதுச்செயலகத்தின் தலைவர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ் பீ சுவ}ஸ்வராவின் தலைமையில் இன்று காலை கோட்டை ரயில்நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் நிறுவன அதிகாரிகள் மற்றும் ரயில்வே திணைக்களத்தி;ன் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்
ஆரம்ப நிகழ்வையடுத்து இன்று காலை 6.20 க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தினை வந்தடைந்த யாழ்தேவி ரயில் காலை 6.40க்கு “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கான பயணமாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டது.
குறித்த ரயில் இன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ் ரயில் நிலையத்தினை சென்றடையவுள்ளது
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ் பீ சுவஸ்வர
“யாழ்ப்பாண மாவட்ட மக்களிடையே கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் சமூக மற்றும் நெறிமுறைகள் மற்றும் தேசியமட்டத்திலான அர்ப்பணிப்புக்கள் மற்றும் முயற்சிகள் மூலம் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே இதன்நோக்கமாகும்”