கூட்டு இராணுவப் பயிற்சி

16.07.2024 07:40:17

சீனாவும் (China) ரஷ்யாவும் (Russia) ஜூலை தொடக்கத்தில் கடலில் கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பித்ததாக சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஜான்ஜியாங்கை ஒட்டியுள்ள நீர் மற்றும் வான்வெளியில் கூட்டுக் கடல்-2024 பயிற்சி நடைபெறுகிறது என்று அமைச்சகம் எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

கடல்சார் பாதுகாப்பு சவால்களை கூட்டாக எதிர்கொள்வதிலும், உலகளாவிய மற்றும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதில் இரு தரப்பினரின் உறுதிப்பாடு மற்றும் திறன்களை வெளிப்படுத்துவது தற்போதைய பயிற்சியின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் ஜப்பான் அதன் எல்லைகளுக்கு அருகே மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சிகள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளது.

 

இந்த நிலையில், சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கூட்டுப் பயிற்சிகள் அவர்களின் மூலோபாய கூட்டாண்மையின் குறிப்பிடத்தக்க காட்சியாக விளங்குகின்றன, ஆய்வாளர்கள் அதை அப்பகுதியில் அதிகரித்து வரும் அமெரிக்க இராணுவ பிரசன்னத்திற்கு விடையிறுப்பாகக் கருதுகின்றனர்.