எதிர்பார்ப்பு மிக்க பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கெதிரான தொடர்களில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வேகபந்து வீச்சாளர்களான மொஹமட் அப்பாஸ் மற்றும் நஷிம் ஷா ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முன்னாள் வீரரான மொய்ன் கானின் மகனும், பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் குவெட்டா கிளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடும் அசாம் கான் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கெதிரான ரி-20 தொடர்களில் மூலம் சர்வதேச அறிமுகத்தை பெறுகிறார்.
அதேபோல, துடுப்பாட்ட சகலதுறை வீரரான இமாட் வசிம் ரி-20 தொடருக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
சரி தற்போது முதலாவதாக ஒருநாள் அணியின் விபரத்தை பார்க்கலாம்.
பாபர் அசாம் தலைமையிலான அணியில், சதாப் கான், அப்துல்லா ஷாஃபிக், பஹீம் அஷ்ரப், ஃபக்கர் ஸமான், ஹெய்டர் அலி, ஹரிஸ் ரவூப், ஹரிஸ் சோஹைல், ஹசன் அலி, இமாம்-உல்-ஹக், முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, சர்பராஸ் அகமது, சவுத் ஷகீல், ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் உஸ்மான் காதிர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பாபர் அசாம் தலைமையிலான ரி-20 அணியில், சதாப் கான், அர்ஷத் இக்பால், அசாம் கான், பஹீம் அஷ்ரப், ஃபக்கர் ஸமான், ஹெய்டர் அலி, ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, இமாத் வாசிம், முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம்;, சர்பராஸ் அகமது, ஷாஹீன் ஷா அப்ரிடி, ஷர்ஜீல் கான் மற்றும் உஸ்மான் காதிர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பாபர் அசாம் தலைமையிலான டெஸ்ட் அணியில், முகமது ரிஸ்வான், அப்துல்லா ஷாஃபிக், அபிட் அலி, அசார் அலி, பஹீம் அஷ்ரப், ஃபவாட் அலாம், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, இம்ரான் பட், முகமது அப்பாஸ், முகமது நவாஸ், நசீம் ஷா, நயுமான் அலி, சஜித் கான், சர்பராஸ் அகமது, சவுட்; ஷாகீல், ஷாஹீன் ஷா அப்ரிடி, ஷாநவாஸ் தாஹனி, யாசிர் ஷா மற்றும் ஷாயித் மஹ்மூத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
எதிர்வரும் ஜூலை மாத ஆரம்பத்தில் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி-20 தொடர்களில் விளையாடுகின்றது.
இதனைத்தொடர்ந்து ஜூலை மாத இறுதியில் மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது.