"உக்ரைனுக்கு Rafale போர் விமானங்களை வழங்க தயார்".
| 
			 பிரான்ஸ், உக்ரைனுக்கு ரஃபேல் போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. உக்ரைன் தனது விமானப்படையை மேம்படுத்தும் முயற்சியில், பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதில் பிரான்ஸ் முக்கிய பங்காற்றும் நாடாக உள்ளது. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்ததின்படி, அமெரிக்கா, ஸ்வீடன் மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுடன் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.  | 
		
| 
			 இந்த நாடுகள், உக்ரைனின் எதிர்கால விமானப்படையின் முதன்மை ஆதாரமாக இருக்கும் F-16, Gripen மற்றும் Rafale போர் விமானங்களை வழங்கும் வாய்ப்பு உள்ளன. உக்ரைன் அரசு மதிப்பீட்டின்படி, நாட்டின் விமானப்படையை முழுமையாக மீட்டெடுக்க சுமார் 250 போர் விமானங்கள் தேவைப்படும். இந்த சூழ்நிலையில், பிரான்ஸ் தனது Dassault Aviation நிறுவனத்தின் மூலம் ரஃபேல் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக Le Journal du Dimanche என்ற பிரஞ்சு செய்தித்தாள் தெரிவித்துள்ளது. மேலும், Dassault நிறுவனம் உக்ரைன் அதிகாரிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ரஃபேல் விமானங்கள், பல்வேறு சூழ்நிலைகளில் செயல்படக்கூடியவையாகவும், உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடியவையாகவும் உள்ளன. உக்ரைனின் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்ய இது ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.  |