தடுப்பூசி போடப்படாத மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் - ஜேர்மனி

30.11.2021 16:03:54

ஜேர்மனியின் புதிய துணை சான்சலர் நியமிக்கப்படவுள்ள ராபர்ட் ஹேபெ, தடுப்பூசி போடப்படாத மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும் என கூறியுள்ளார்.

மீண்டும் அதிகரித்துவரும் கோவிட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்த ஐரோப்பா முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுகிறது.

செவ்வாயன்று ஜேர்மன் கூட்டாட்சி மற்றும் பிராந்திய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, பசுமைக் கட்சியின் இணைத் தலைவரும், புதிய கூட்டாட்சி அரசாங்கத்தின் துணை சான்சலருமான ராபர்ட் ஹேபெக் (Robert Habeck), தடுப்பூசி போடப்பட்ட அல்லது மீட்கப்பட்டவர்களை மட்டுமே நாடு முழுவதும் அத்தியாவசியமற்ற கடைகள் மற்றும் "பொது அமைப்புகளில்" அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

அதேபோல், தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு விதிக்கப்படவேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.