எஸ்.எல். சி ப்ளு அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!
15.08.2021 15:29:25
உலக கிண்ண தொடரை முன்னிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நடத்தும் விசேட இருபதுக்கு 20 தொடரின் எஸ்.எல்.சி க்றின்ஸ் அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் எஸ்.எல். சி ப்ளு அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்றுள்ளது.
கண்டி பல்லேகலையில் இடம்பெற்ற இந்த போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற எஸ்.எல்.சி க்றின்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
தொடர்ந்து 181 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய எஸ்.எல்.சி ப்ளு அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து இலக்கை அடைந்தது.