கொரோனாவில் இருந்து ஒரு கிராமத்தையே காப்பாற்றிய PHI அதிகாரி!

02.09.2021 05:55:36

கொரோனா தொற்றுக்கு உள்ளாக இருந்த கிராமம் ஒன்று பொது சுகாதார அதிகாரியின் நடவடிக்கையால் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று பண்டாரகம பிரதேசத்தில் பதிவாகி உள்ளது.


பண்டாரவெல மகுல்எல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தில் வீடொன்றில் 80 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதனை சாதாரண மரணமாக கருதி அவரின் உறவினர்கள் இறுதிக் சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் தகவல் அறிந்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் குறித்த வீட்டில் உள்ளவர்களுக்கு உடனடியாக என்டிஜன் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

இதன் போது 4 பேருக்கு தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
பின்னர் உயிரிழந்த நபரின் சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மரணத்தையடுத்து குறித்த வீட்டிற்கு அருகில் திரண்டிருந்த மக்களை அங்கிருந்து உடனடியாக வௌியேற்ற பொது சுகாதார அதிகாரியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.