கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து அம்பானி, அதானி வெளியேற்றம்

18.12.2024 08:05:33

100 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து அம்பானி மற்றும் அதானி வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொழிலதிபர் அம்பானியின் சொத்து மதிப்பு ஐந்து மாதங்களில் 120 பில்லியன் டாலரிலிருந்து 96 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. மேலும் கடன் அதிகரித்துள்ளதால் பங்கு மதிப்பும் சரிந்து உள்ளது.

அதேபோல், தொழிலதிபர் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஆறு மாதங்களில் 122.3 பில்லியன் டாலரில் இருந்து 82  பில்லியன் டாலராக குறைந்துள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளதால், அவரது சொத்து மதிப்பு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ப்ளூம்பெர்க் வெளியிடப்பட்ட 100 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இருவரின் சொத்து மதிப்பு இன்னும் சில மாதங்களில் மீண்டும் உயர்ந்து, இந்த பட்டியலில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.