"உச்சத்தில் இருக்கும் விஜய் இதை செய்வது சாதாரண விஷயம் அல்ல".

26.12.2025 15:25:02

நடிகர் சுதீப் கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர். தமிழில் புலி படத்தில் விஜய் உடன் அவர் நடித்து இருக்கிறார். தற்போது மார்க் என்ற படத்தில் அவர் நடித்து இருக்கிறார். அந்த படம் தமிழிலும் தற்போது ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு செல்வது பற்றி அவர் பேசி இருக்கிறார்.

ஒரு பெரிய நட்சத்திரம் அரசியலுக்கு வருவது மக்கள் மற்றும் சமூகத்தின் மீதான அக்கறையே காட்டுகிறது. சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது சாதாரண விஷயம் அல்ல என அவர் கூறி இருக்கிறார்.