முடிவுக்கு வந்த பிரச்சனை கருப்பு காலையில் ரிலீஸ்!

15.05.2026 07:59:55

சூர்யாவின் கருப்பு படம் மே 14ம் தேதி, நேற்று, ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக தடங்கல் ஏற்பட்டது. தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தர வேண்டிய கடனை செட்டில் செய்ய வேண்டும் என பைனான்சியர்கள் கேட்டதால் ரிலீசுக்கு தடங்கல் ஏற்பட்டது.

படம் ரிலீஸ் ஆகாததால் இயக்குனர் RJ பாலாஜி கண்ணீர் விட்ட வீடியோவும் வைரல் ஆனது. அவருக்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

நேற்று படம் வராத நிலையில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் தற்போது எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து இன்று காலை படம் ரிலீஸ் ஆகிறது. இதை தயாரிப்பு நிறுவனம் உறுதியாக அறிவித்து இருக்கிறது.

காலை 9 மணி காட்சியை பார்க்க ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் தற்போது காத்திருக்கின்றனர்.