
நடிகர் யோகி பாபுவின் அடுத்த படம்!
16.04.2025 07:00:00
நடிகர் யோகி பாபு கோலிவுட்டில் முக்கிய காமெடியன்களில் ஒருவர். அவர் தற்போது அஜித், விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடிப்பது மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், கடைசியாக 'போட்' படத்தில் நடித்துள்ளார். இவர் கைவசம் தற்போது Medical Miracle, ராஜா சாப் உள்ளிட்ட பல படங்கள் உள்ளன. |
இந்நிலையில், அடுத்து யோகி பாபு நடிக்கப்போகும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, ரா.ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, அருள் முருகன் கோவிலில் எளிமையான பூஜையுடன், இனிதே இன்று துவங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. |