இரண்டாவது ‘டி–20’ போட்டியில் இந்திய பெண்கள் ஏமாற்றம்

10.10.2021 12:40:07

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ‘டி–20’ போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. கோல்டு கோஸ்ட் நகரில் 2வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மேக் லான்னிங் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

பூஜா ஆறுதல்: இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (1), ஷபாலி வர்மா (3), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (7) ஏமாற்றினர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (28) ஓரளவு கைகொடுத்தார். யஸ்திகா பாட்யா (8), ரிச்சா கோஷ் (2) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். தீப்தி சர்மா (16) ‘ரன்–அவுட்’ ஆனார். நிகோலா கேரி வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த பூஜா, டார்லிங்டன் வீசிய கடைசி ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.

இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 118 ரன் எடுத்தது. பூஜா (37) அவுட்டாகாமல் இருந்தார்.