மோகன்லாலுக்கு உயரிய விருதை அறிவித்த மத்திய அரசு!

22.09.2025 07:05:00

நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆக வலம் வருபவர். மேலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருக்கு தென்னிந்தியா முழுவதும் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவித்து இருக்கிறது மத்திய அரசு. 2023ம் ஆண்டுக்கான இந்த விருது தேசிய விருது வழங்கும் விழாவில் சேர்த்து வழங்கப்படும் எனவும் அரசு கூறி இருக்கிறது.

மோகன்லாலுக்கு உயரிய விருது அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் மம்மூட்டி அவருக்கு வாழ்த்து சொல்லி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

2019ம் ஆண்டுக்கான விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. அதை தற்போது 2023ம் ஆண்டுக்கான Dadasaheb Phalke விருது மோகன்லாலுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.